வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 2 மே 2015 (19:21 IST)

விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் 5 தமிழர்கள் கைது

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து தமிழர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
 
43 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள் மீது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003 - 2010ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும் குற்றம் சுமத்தப்பட்டனர்.
 
இதனால் ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் இவர்களுக்கு சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது. இவர்களுக்கு 19 மாதங்கள் தொடக்கம், 75 மாதங்கள் வரையாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
2011ஆம் ஆண்டு இவர்களை நெதர்லாந்தின் கீழ் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்திருந்த போதிலும், தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில் தண்டனை அளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்க பட்டியலில் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.