Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நுரையீரலை தானம் செய்த 41 நாள் குழந்தை: வரலாற்று சாதனை


Abimukatheesh| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (19:37 IST)
இங்கிலாந்தில் பிறந்து 41 நாட்களான குழந்தை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டதால் உயிர்பிழைப்பது கடிணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த குழந்தையின் நுரையீரலை தானம் செய்யப்பட்டது. இது வரலாற்றில் சாதனை ஆகும்.

 

 
இங்கிலாந்தில் உள்ள தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்து 40 நாட்கள் வரை நன்றாக இருந்த குழந்தை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் மருத்துவர்கள் குழந்தை உயிர் பிழைப்பது கடிணம் என்று கூறியுள்ளனர்.
 
இதனால் அந்த குழந்தையின் பெற்றோர், குழந்தை நுரையீரலை தானம் செய்ய முடிவெடுத்தனர். இமோகன் போல்டன் என்ற 5 மாத பெண் குழந்தை ஒன்றுக்கு நுரையீரல் சரியாக செயல்படாமல், இரண்டு முறை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருந்தும் அந்த குழந்தையின் உடல்நிலை பூரணமாக குணமடையவில்லை.
 
இதனால் இந்த ஆண் குழந்தையின் நுரையீரல் தானம் செய்யப்பட்டதால், பெண் குழந்தைக்கு மூன்றாவது முறையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் பிறந்து 41 நாட்களில் உடலுறுப்பு தானம் செய்த முதல் குழந்தை என்பதால், இவர் பெயர் வரலாற்றில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :