1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2015 (12:09 IST)

400 பேர் படகில் பலியான விவகாரம்; மத மோதலால் படகு விபத்து ஏற்பட்டதாக தகவல்

லிபியாவில் 400 பேர் படகு விபத்து ஏற்பட்டு பலியானது மத மோதலால்தான் என்று மீட்கபட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, லிபியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்ததை ஒட்டி, அங்கிருந்து ஏராளமானோர் இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். இந்நிலையில், லிபியா கடற்பகுதி அருகே, படகு ஒன்று திடீரென்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
 

 
அதில், 400க்கும் அதிகமானோர், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து படகு மூழ்கிய இடத்தை விமானம் கண்டு பிடித்தது. அங்கு கடற்படை கப்பல் அனுப்பப்பட்டது. அதையடுத்து அங்கு கடலில் தத்தளித்து கொண்டிருந்த 4 பேரை காவல் துறையினர் உயிருடன் மீட்டனர்.
 
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் நைஜீரியா, கானா மற்றும் நைஜர் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கப்பல் மூழ்கியது குறித்து அவர்களிடம் இத்தாலி நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
 
விசாரணையில், காவல் துறையினரால் மீட்கப்பட்ட ஒருவர், படகில் வந்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அகதிகளிடையே மோதல் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் மோதல் உச்ச கட்டத்தை அடைந்ததும் கை கலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அப்போது, 12 கிறிஸ்தவர்கள் கடலில் வீசி கொல்லப்பட்டதாகவும், அதனால் கப்பல் நிலை தடுமாறி கடலில் மூழ்கியதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 15 முஸ்லிம் அகதிகளை இத்தாலி காவல் துறையினர் கைது செய்தனர்.