1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 24 மே 2016 (23:29 IST)

400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியன்: நாசா தகவல்

400 கொடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பு தான் உலகில் உயிர்கள் வாழ காரணம் என்று நாசா தெரிவித்துள்ளது.


 

 
சூரியனின் வெப்ப ஆற்றல் மூலம்தான் குளிர்மையாக இருந்த பூவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு உகந்த கிரகமாக மாறியது என நாசா தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து ஆய்வில் நாசா விஞ்ஞானிகள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளதாவது:-
 
சுமார் 400 கோடு ஆண்டுகளுக்கு முன் சூரியன் தோன்றிய போது தற்போது இருக்கும் வெப்பமும், பிரகாசமும் இல்லை. ஆனால் எப்போதும் போல அதன் வெளிபுறம் எரிமலை போன்று வெடித்துக் கொண்டு தான் இருந்தது.
 
அப்படி வெடித்து கொண்டிருக்கும் போது வெளிப்பட்ட வெப்பத்தில் எண்ணற்ற மூலகூறுகள் தான் பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான ஆற்றலையும், சூழலையும் உருவாக்கி உள்ளது.
முன்பு இருந்த சூரியன் தனது ஆற்றலை இழந்த பின்னர், இளம் நட்சத்திரம் ஒன்று சூரியனாக உருவெடுத்தது. அதுதான் தற்போது நமக்கு சூரியான உள்ளது.
 
மேலும், சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றல்கள் தான் வாழ்க்கைக்கு தேவையான டிஎன்ஏ, ஆர்என்ஏ போன்ற மூலக்கூறுளாக உரு மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.