வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2015 (20:53 IST)

பிக்காசோவின் ஓவியங்களை 40 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்தவருக்கு சிறை

பிக்காஸோவின் ஓவியங்களை 40 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஓவியர் பாப்லோ பிக்காஸோவின் 270க்கும் அதிகமான ஓவியங்களை சுமார் 40 ஆண்டுகளாக மறைத்து வைத்த குற்றத்திற்காக, பிக்காஸோவிடம் மின் இணைப்பு திருத்துனராக வேலை பார்த்துவந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
 

 
பியார் லே கெனெக் மற்றும் அவரது மனைவி டெனியெல்லெ இருவரும் திருட்டுப் பொருட்களை வைத்திருந்தமைக்காக பிரான்ஸின் தெற்கு நகரான கிரெஸ்ஸேவில் உள்ள நீதிமன்றம் ஒன்று அவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.
 
பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான இந்த ஓவிய வேலைப்பாடுகள் பிக்காஸோவின் கடைசி மனைவியினால் தமக்கு பரிசாக வழங்கப்பட்டதாக பியார் லே கெனெக் கூறியுள்ளார்.
 
இந்த ஓவியங்களை அத்தாட்சிப் படுத்திக்கொள்வதற்காக அவற்றை பாரிஸுக்கு அவர் கொண்டு சென்றிருக்கிறார். அப்போது, அவற்றைக் கண்டுபிடித்த பிக்காஸோவின் மகன் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.