3.1 கோடியாக உயர்ந்த உலக கொரோனா பாதிப்பு: குணமடைந்தோர் எண்ணிக்கை 2.2 கோடி

world corona
3.1 கோடியாக உயர்ந்த உலக கொரோனா பாதிப்பு
siva| Last Updated: திங்கள், 21 செப்டம்பர் 2020 (07:38 IST)
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,228,490 என்றும், இதனால் சுமார் 3 லட்சம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது. அதேபோல் உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 965,036 என்றும், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,821,311என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,004,768 என்றும், பலியானோர் எண்ணிக்கை 204,118 என்றும், குணமானோர் எண்ணிக்கை 4,250,140என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,485,612 என்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,392,650 என்றும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 87,909 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,544,629 என்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,851,227 என்றும், பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 136,895 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 54 லட்சம் பேருக்கும் அமெரிக்காவில் 33,265 பேருக்கும் பிரேசிலில் 45 லட்சம் பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :