வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (19:18 IST)

இந்தோனேஷிய நிலச்சரிவு: 25க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு

இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா பிராந்தியத்தில் நடந்த நிலச்சரிவில் இருந்து இருபத்தி ஐந்துக்கும் அதிகமான சடலங்களை தாங்கள் மீட்டிருப்பதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.


 

 
குறைந்தது 80 பேர் வரை இன்னமும் காணவில்லை. ஜம்ப்லுங் என்கிற கிராமத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் தமது மீட்புப்பணியில் கனரக பளுதூக்கும் இயந்திரங்களை அந்த பகுதிக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.
 
பல்நாட்கள் பெய்த பெருமழையைத்தொடர்ந்து மலையொன்றின் நிலச்சரிவில் ஜெம்ப்லுங் கிராமம் புதையுண்ட இடத்தில் மீட்புப்பணிகள் நடந்துவருகின்றன.
 
பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து, ஐந்நூற்றுக்கும் அதிகமான கிராமத்தவர்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.
 
இந்த பேரிடரில் தப்பியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விதோதோ அந்த பகுதிக்கு சென்றிருக்கிறார்.