வீடியோ காலில் கணவருடன் பேசிக்கொண்டே தற்கொலை செய்துக்கொண்ட மாடல் அழகி


Abimukatheesh| Last Updated: புதன், 2 ஆகஸ்ட் 2017 (11:34 IST)
வங்கதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

 

 
வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியை சேர்ந்த ரிசிலா பிண்டே வாசர்(22) என்பவர் மாடல் அழகியாக இருந்தவர். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது கணவருடன் வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் வழியாக பேசியுள்ளார்.
 
அப்போது தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :