வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By bharathi
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (11:46 IST)

1 மில்லியன் ஆண்டுகள் பழமையான குரங்கின் எழும்புகள் கண்டுபிடிப்பு

1 மில்லியன் ஆண்டுகள் பழமையான குரங்கின் எழும்பு படிமங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

டொமினிக்கன் குடியரசில் உள்ள அல்டாக்ரசியா மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் தொல் பொருள் ஆராய்சியாளர்கள் நீண்ட நாட்களாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குகையின் ஒரு பகுதியில் உள்ள சுண்ணாம்பு கற்களுக்கு இடையே ஆய்வு பணியை மேற்கொண்ட போது, அதனுள் 1.3 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிறிய ரக குரங்கின் எழும்பு படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், "கண்டுபிடிக்கப்பட்ட குரங்கு இனங்கள் கரீபியன் தீவுகளில் வாழ்ந்தவை. அப்படியிருக்க இவை டொமினிக்கன் குடியரசு நாட்டுக்கு எப்படி வந்தன என்பவை ஆச்சரியமளிக்கிறது எனத் தெரிவித்தார்.