வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2016 (14:05 IST)

இனப்பெருக்க பண்ணையில் இருந்து தப்பிய 180 நாகப்பாம்புகள்: பீதியில் பொதுமக்கள்

சீனாவின் தென்மேற்கு சிசுவன் மாகாணத்தில் இனப்பெருக்க பண்ணையில் இருந்து 180 நாகப்பாம்புகள் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.


 
 
ஜியுலாங் என்னும் இனப்பெருக்க பண்ணையில் இருந்து தப்பித்த 180 குட்டி நாகப்பாம்புகளில் 23 பாம்புகள் பெரியவை. அவற்றில் 120 பாம்புகள் பிடிபட்டன. 
 
30 பாம்புகள் கொல்லப்பட்டன. 7 பாம்புகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இறுதியாக மீதமுள்ள 23 பாம்புகளை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 
பாம்பு கடிபட்டால் மருந்துகள் ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதை தவிர்த்து, பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றும், பாம்புகளை கண்டால் அருகில் உள்ள வனத்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.