11 வயது சிறுமியை திருமணம் செய்தவனுக்கு 14 ஆயிரம் ரூபாய் அபராதம்

kid
Last Modified புதன், 11 ஜூலை 2018 (13:13 IST)
41 வயது நபர் ஒருவர் 11 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 14ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவை சேர்ந்த சே அப்துல் கரீம் (41) என்பவருக்கு 2 மனைவிகளும் 6 குழந்தைகளும் உள்ளனர். அப்துல் கரீமுக்கு இதெல்லாம் பத்தாது தனது மகள் வயதுடைய 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதற்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
இரண்டு மனைவிகளிடம் அனுமதி பெறாமல் 11 வயது சிறுமியை அமீத் திருமணம் செய்ததால் அவருக்கு 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
அமீத்துக்கு சிறை தண்டனை விதிக்கப்படாததால், கோர்ட்டில் அபராதத் தொகையை கட்டிவிட்டு, இஸ்லாமிய மதக் கவுன்சிலிடமிருந்து திருமண சான்றிதழை பெற்றுள்ளார். தான் சிறுமியுடன் சந்தோஷமாக வாழ்வதாக அமீத் தெரிவித்துள்ளான்.


இதில் மேலும் படிக்கவும் :