வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 21 டிசம்பர் 2016 (18:34 IST)

சுவர்களுக்கு இடையே சிக்கி தவித்த சிறுவன்: 3 நாட்களுக்கு பின் மீட்பு

நைஜீரியாவில் மூன்று நாட்களாக சுவர்களுக்கு இடையே சிக்கித் தவித்த சிறுவனை பொதுமக்கள் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நைஜீரியாவின் ஒடுடுவா பகுதியைச் சேர்ந்த அடுராக்பிமி சகா(12) என்ற சிறுவன், தன் வீட்டை ஒட்டியுள்ள சுமார் 12 அடி அங்குளம் கொண்ட மதில் சுவரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது திடீரென்று சிறுவன் மதில் சுவருக்கும், வீட்டு சுவருக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்து விட்டான்.

சுவருக்குள் விழுந்ததால் சிறுவன் யாரு கண்களுக்கும் தென்படவில்லை. சிறுவன் தொடர்ந்து 3 நாட்களாக சத்தம் போட்டுக்கொண்டே இருந்துள்ளான். அவனுடைய சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. மூன்றாவது நாளில் அவனுடைய சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மதில் சுவரை உடைக்கும்படி கூறியுள்ளனர். மதில் சுவரை உடைக்கும் போது சிறுவன் சத்தமிட்டுள்ளான். இதனால் மதில் சுவரை கவனத்துடன் பொறுமையாக உடைக்க தொடங்கினர்.

பின்னர் தூசி படிந்த நிலையில் அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.