வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2016 (15:23 IST)

நாய் கறி திருவிழா எதிரொலி: 110 சீன நாய்கள் கனடாவில் தஞ்சம்

நாய் கறி திருவிழாவில் இருந்து நாய்களை காப்பாற்ற கனடாவின் சர்வதேச இரக்க சிந்தனை சங்கம் 110 சீன நாய்களை கூண்டில் அடைத்து கனடாவுக்கு கொண்டு சென்றது.


 

 
சீனாவின் யுலின் மாகாணத்தில் ஆண்டுத்தோறும் டிசம்பர் மாதத்தில் நாய் கறி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழா அன்று நாய் இறைச்சி விற்கப்படும். மக்கள் இறைச்சியை வாங்கி சமைத்து, உண்டு மகிழ்வார்கள். இதன்மூலம் குளிர்காலத்தில் அவர்களது உடல்நலம் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றனர்.
 
இதற்கு சமூக நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் இதைத்தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கனடாவின் சர்வதேச இரக்க சிந்தனை சங்கம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
 
இந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் யுலின் பகுதிக்கு சென்று அங்கிருந்து 110 நய்களை கூண்டில் அடைத்து கனடாவுக்கு கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையின் நாய்கள் காப்பற்றப்பட்டதாகவும், இனி அவை சுதந்திரமாக வளரும் என்று கனடாவின் அமைப்பு தெரிவித்துள்ளது.