வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2016 (13:17 IST)

100 ஆவது வயதில் 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

அமெரிக்காவில் 100 ஆவது வயதில் தனது 25 ஆவது பிறந்த நாளை லுயெல்லா டங்கன் என்ற பாட்டி கொண்டாடினார்.


 

 
அமெரிக்காவிலுள்ள மிஸ்சோரி மாகாணத்தில் சிகெஸ்டன் நகரை சேர்ந்த பாட்டி லுயெல்லா டங்கன்.
 
இவருக்கு தற்போது 100 வயதாகிறது. இவர் பிப்ரவரி 29 அம் தேதி பிறந்தார். இதனால் அவரால் தனது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட முடியவில்லை.
 
4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதாதன் பிப்ரவரி 29 ஆம் தேதிதான் வருகின்றது. இந்த "லீப்" ஆண்டில்தான் பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
 
இந்நிலையில், நேற்று அவருக்கு 100 ஆவது வயது. ஆனால் அவரால் தனது 25 ஆவது பிறந்த நாளாக அதை கொண்டாடினார்.
 
இது குறித்து பாட்டி லுயெல்லா டங்கன்  கூறுகையில், "4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடுவது தனக்கு வருத்தமளிக்கவில்லை. மாறாக மகிழ்ச்சியாகவே உள்ளது" என்று என்று புன்னகை தவழ கூறியுள்ளார்.