தொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்!

Webdunia|
நேற்று முன்தினம் பெங்களூருவிலும், நேற்று அகமதபாத்திலும் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது!

கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இ‌தி‌லஇருவ‌ரகொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 16 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ‌ர்‌த்தம‌ற்ற, மோசமான இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :