தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இலங்கையில் வீட்டுக்காவல்?

Webdunia| Last Modified புதன், 1 ஜனவரி 2014 (12:50 IST)
FILE
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களை சந்திக்க வந்த கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 28ம் தேதி யாழ்ப்பாணத்திற்கு வந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழருமான ராதிகா சிற்சபேசன் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான மாவிட்டபுரத்திற்குச் சென்றிருந்தார். அங்குள்ள மக்களை சந்தித்த அவர், அவர்களின் நலன்கள் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று முல்லைத்தீவுக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுடன் அவர் அங்கு செல்லவிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஸ்ரீதரனின் அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர். எனினும் அவர் அங்கு இல்லாததால் காவல்துறையினர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று அதன் நுழைவாயிலில் காத்திருந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :