Widgets Magazine

ஜப்பான்: லட்சக் கணக்கானோர் உணவு, தண்ணீரின்றி தவிப்பு

Webdunia| Last Modified திங்கள், 14 மார்ச் 2011 (21:20 IST)
ஜப்பானில் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட வரலாறு காணாத பூகம்பம் அதனையடுத்த மிகப்பெரிய் ஆழிப் பேரலைகளால் சூறையாடப்பட்ட கடற்கரைப் பகுதி மக்களில் லட்சக்கணக்கானோர் 4-வது நாளாக உணவு, தண்ணீரின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரிதும் பாதிக்கப்பட்ட மியாகி பகுதியில் ஆயிரண்க்கணக்கான உடல்கள் கரையொதுங்கியுள்ளன. ஊரில் ஒரேயொரு மின்சார இடுகாடு மட்டுமே இருப்பதாலும் அங்கு நாளொன்றுக்கு 18 உடல்களை மட்டுமே தகனம் செய்ய முடியும் என்பதாலும் உடல்களை வைத்துக் கொண்டு ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.

உணவு, தண்ணீர் இல்லாததோடு வெப்ப அளவும் குறைந்து குளிரில் மக்கள் வாடி வருவதாகவும் மற்றொரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஃபுகுஷிமாவில் 3-வது அணு உலையும் வெடித்துள்ளதால் கதிர்வீச்சு அபாயமும் அந்த மக்களை துரத்துகிறது.

சிறிதளவு உணவு, குடிநீருடன் வடகிழக்கு பகுதிகளில் மக்கள் தற்போது இருந்து வருகின்றனர். நிவாரணப்பொருட்களை அப்பகுதிகளுக்குச் செல்ல முடிய்வைல்லை.

தேவைக்கேற்ப நிவாரணப்பொருட்கள் வர முடியவில்லை. 10% நிவாரணப்பொருட்களே இதுவரை தங்கள் கைக்குக் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளிலிருந்து வெளியே கொண்டு வரப்படும் உடல்களை பாதுகாப்பாக வைக்கும் பைகளுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :