காபூலில் குண்டுவெடிப்பு: 23 பேர் பலி

காபுல்| Webdunia| Last Modified புதன், 2 செப்டம்பர் 2009 (18:09 IST)
ஆப்கானிஸ்தான் உளவுத்துறையின் துணைத் தலைவரைக் குறிவைத்து காபூல் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

காபூலின் கிழக்குப் பகுதியில் உள்ள மெடெர்லம் மசூதியை ஆப்கானிஸ்தான் உளவுத் துறையின் துணைத் தலைவர் அப்துல்லா லக்மனி பார்வையிட்டார். அப்போது தாலிபான் பயங்கரவாதி ஒருவன் மசூதிக்கு வெளியே தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் அப்துல்லா லக்மனி உட்பட 23 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. தாலிபான்களின் தாக்குதல் திறனை ஆப்கானிஸ்தான் உளவு அமைப்பு குறைவாக மதிப்பிட்டது இத்தாக்குதலுக்கு காரணமாக அமைந்ததாக கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :