இந்தியாவுடன் நிரந்தர உறவு: அமெரிக்க குடியரசு கட்சி விருப்பம்!

Webdunia| Last Modified செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (18:04 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அந்நாட்டின் பிரதான அரசியல் கட்சியான குடியரசுக் கட்சி, இந்தியாவுடன் நீடித்து நிலைக்கும் நிரந்தர உறவை ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

மின்னெசோடா நகரில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு இன்று துவங்கியது. இதில் இந்தியாவுடனான அக்கட்ச்யின் கடந்த கால உறவுகள் குறித்தும், அரசியல் சுதந்திரம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதேபோல் இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் குடியரசுக் கட்சியின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் மெக்கெய்ன் போட்டியிடுகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :