அதிபர் அகமதிநிஜாத் எதிர்ப்பாளர்கள் மீதான வழக்கு துவங்கியது

டெஹ்ரான்| Webdunia| Last Modified சனி, 1 ஆகஸ்ட் 2009 (11:55 IST)
ஈரான் அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் பெற்ற வெற்றி செல்லாது எனக் கூறி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு இன்று துவங்கியுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் ஐ.ஆர்.என்.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த ஜூன் மாதம் அதிபர் தேர்தல் முடிவு வெளியான பின்னர், அகமதிநிஜாத் வெற்றி பெற்றது செல்லாது எனக் கூறி எதிர்க்கட்சியைச் சேர்ந்த மொசாவியின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு டெஹ்ரானில் உள்ள நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் எத்தனை பேர் குற்றம்சாற்றப்பட்டுள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், அந்நாட்டு செய்தி நிறுவனங்களில் வெளியான செய்தியில், 30 பேர் வரை இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :