ஃபேஸ்புக், யூ ட்யூப்பை தொடர்ந்து ட்விட்டருக்கும் பாகிஸ்தானில் தடை

இஸ்லாமாபாத் | Webdunia| Last Modified வெள்ளி, 21 மே 2010 (15:34 IST)
ஃபேஸ்புக் மற்றும் யூ ட்யூப்பைத் தொடர்ந்து பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணைய தளத்திற்கும் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகமது நபியின் படம் தொடர்பாக ஃபேஸ்புக் வலை தளத்தில் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து நேற்று முன்தினம் பேஸ்புக் வலை தளத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், யூ ட்யூப் விடியோ இணையதளத்தில் முகமது நபி தொடர்பான விடியோ இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தததையடுத்து, அந்த இணையதளமும் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டது.
இது தவிர இதே சர்ச்சை தொடர்பாக விக்கிபீடியா உள்ளிட்ட 450 இணையதளங்களுக்கும் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில்,ஃபேஸ்புக் மற்றும் யூ ட்யூப்பைத் தொடர்ந்து பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணைய தளத்தையும் பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

பாகிஸ்தானில் ட்விட்டர் தளத்திற்கு செல்லுபவர்கள், அந்த தளம் தடை செய்யப்பட்டுள்ள தகவலையே பார்க்க முடிவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :