வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2016 (15:37 IST)

உலக சினிமா - ரேபிட் டாக்ஸ்

உலக சினிமா - ரேபிட் டாக்ஸ்

திருட்டு, கடத்தல் கதைகளுக்கு இயல்பாகவே ஒரு சுவாரஸியம் உண்டு. இரண்டு கிளைக்கதைகள் இதில் இணையும் போது சுவாரஸியம் கூடும். 1974 -இல் வெளியான ரேபிட் டாக்ஸ் படத்தை அதேபெயரில் 2015 -இல் ரீமேக் செய்தனர். இதுவொரு இத்தாலி திரைப்படம்.

 
 
நான்கு கொள்ளையர்கள் இணைந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்கிறார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக போலீஸ் அவர்களை துரத்த ஆரம்பிக்கிறது. அதற்கு முன் நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் கடத்தலின் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் காயம்பட்டு விடுகிறான். அவர்கள் தப்பிப்தற்காக இளம் பெண் ஒருத்தியை பிணைக்கைதியாக பிடித்து தங்களுடன் கடத்திச் செல்கின்றனர்.
 
 
போலீஸ் எப்படியும் தொடர்ந்துவரும் என்ற நிலையில், காயம்பட்ட தலைவன் மற்றவர்களை அந்தப் பெண்ணுடன் போகச் சொல்கிறான். எதிர்படும் முதல் வண்டியை மறித்து அவர்கள் தப்பி செல்ல வேண்டும். தலைவன் தனது காயத்துடன் போலீஸாரை எதிர்கொள்கிறான். அடுத்த விநாடியே தலையில் சுடப்பட்டு மரணமடைகிறான். 
 
கொள்ளையர்கள் மூன்று பேரும் அந்த பெண்ணுடன் ஒரு காரை மறிக்கிறார்கள். நடுத்தர வயது மனிதன் அந்த காரை ஓட்டிக் கொண்டு வருகிறான். அவனது மகளுக்கு - சிறுமி - ஒரு அறுவை சிகிச்சை இருக்கிறது. உடனடியாக அவளை மருத்துவமனையில் அனுமதித்தாக வேண்டும். இப்போதுகூட அவள் மருந்தின் மயக்கத்தில் இருக்கிறாள். தொடர்ச்சியாக 
அவளுக்கு மருந்தை செலுத்தி அதேநிலையில் வைத்திருக்க வேண்டும்.

 
 
இப்படியொரு இக்கட்டான சூழலில் கொள்ளையர்களின் விருப்பத்தின்படி அந்த மனிதர் காரை செலுத்த வேண்டியிருக்கிறது. நடுவில் போலீஸாரிடம் மாட்டாமல் எப்படி தப்பிக்கிறார்கள். கொள்ளையர்களுக்குள் நடக்கும் சண்டை, திடுக்கிட வைக்கும் கிளைமாக்ஸ் திருப்பம் என விறுவிறுப்பாக செல்கிறது படம். 
 
இத்தாலிய இயக்குனர் எரிக் கன்னஸோ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். த்ரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற திரைப்படம்.