வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Annakannan
Last Updated : திங்கள், 23 ஜூன் 2014 (13:25 IST)

சென்னையில் ஸ்லோவேனியத் திரை விழா

புது தில்லியில் உள்ள ஸ்லோவேனியத் தூதரகமும் சென்னையில் உள்ள அதன் துணைத் தூதரகமும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனும் இணைந்து ஸ்லோவேனியத் திரை விழா (SLOVENIAN FILM FESTIVAL)வைச் சென்னையில் நடத்துகின்றன. 
 
இதனை இந்தியாவுக்கான ஸ்லோவேனியத் தூதர் தர்ஜா பவ்தாஸ் குரேத் (Mrs.Darja Bavdaz Kuret), 2014 ஜூன் 23 அன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில் உள்ள இரஷ்ய அறிவியல் & கலாச்சார மையத்தில் மாலை 6 மணிக்கு இந்த விழா தொடங்குகிறது.
 
சென்னையில் உள்ள ஸ்லோவேனிய துணைத் தூதரகத்தின் கவுரவத் தூதர் அமித் கோயல், திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியின் இணைத் தலைவர் லெட்சுமணப் பிரபு, இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் தலைவர் சிவன் கண்ணன், இந்த அமைப்பின் துணைத் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா சுப்பிரமணியம், குத்து விளக்கு ஏற்றித் தொடக்கி வைக்கிறார்.
 
தொடக்க விழாவைத் தொடர்ந்து, குட் நைட், மிஸ்ஸி [GOOD NIGHT, Missy (Lahko noc, gospodicna/2011/97 min)] என்ற படம், திரையிடப்படுகிறது.

இதன் அழைப்பிதழ் அடுத்த பக்கத்தில்...

 ஸ்லோவேனியத் திரை விழா (SLOVENIAN FILM FESTIVAL) அழைப்பிதழ்