1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Ashok
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2015 (13:28 IST)

பிறந்த நாளில் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் இணைகிறார் ராகவா லாரன்ஸ்

முனி, காஞ்சனா போன்ற வெற்றி படங்களை நடித்த ராகவா லாரன்ஸ். இந்த படங்கள் மூலம் இவர் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி நடித்து வருகிறார். இவருடைய படங்கள் எல்லாம் பேய் ஹிட்டாக மாறியது. இவருடைய காஞ்சனா , முனி படங்கள் எல்லாம் வசூல் சாதனை படைத்தது.
 

 
இந்நிலையில் இதுவரை தனது பெயரில் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இணையாமல் இருந்த லாரன்ஸ் நாளை தனது பிறந்த நாளையொட்டி டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் இணைகிறார். ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க போகிறார்.
 
மேலும், அவரது ஸ்ரீ ராகவேந்திரர் அறக்கட்டளை மூலம் படிக்க வைக்கும் 400 குழந்தைகளுடன் நாளை அம்பத்தூரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.