Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதலில் இந்தியாவில் ரிலீஸாகும் தீபிகா படுகோன் நடிக்கும் XXX ஹாலிவுட் திரைப்படம் - டிரெய்லர்

Sasikala| Last Updated: திங்கள், 2 ஜனவரி 2017 (12:52 IST)
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஹாலிவுட்டில் முதன்முதலாக நடித்துள்ள XXX திரைப்படம் இந்தியாவில் முதலில்  வெளியாக உள்ளது.  2007 இல் ஃபாரா கானின் "ஓம் ஷாந்தி ஓம்" இந்தி ப‌ட‌த்தின் மூலம் இந்தியா முழுவ‌தும் அறியப் பட்டார்.

 
ஹாலிவுட் படங்களைப் பொறுத்த வரை முதலில் அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியாகி ஒரு வாரத்திற்கு பின்னரே  இந்தியாவில் வெளியாவது வழக்கம். சில நேரங்களில் அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இந்தியாவிலும் வெளியாகும்.
 
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஹாலிவுட்டில் முதன் முதலாக நடித்துள்ள ”XXX ரிட்டர்ன் ஆஃப் த சாண்டஸ்  கேஜ்”திரைப்படம், முதலில் இந்தியாவில் வெளியாக உள்ளது. இந்த படம் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் வரும் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 20-ஆம் தேதிதான் வெளியாக உள்ளது. இந்த  படத்தில் நடிகை தீபிகா படுகோன் படுகவர்ச்சியாக நடித்துள்ளதார் என கூறப்படுகிறது.

XXX ரிட்டர்ன் ஆஃப் த சாண்டஸ்  கேஜ் திரைப்படத்தின் பிரமாணட டிரெய்லர் இங்கே....

 


இதில் மேலும் படிக்கவும் :