1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2016 (17:08 IST)

வரகு பொங்கல்

வரகு நார்ச்சத்து அரிசி,கோதுமையை விட அதிகம்.வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.
 
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தலாம்.
 
தேவையான பொருள்கள்:
 
வரகு அரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - 50 கிராம்
எண்ணெய்- 1 ஸ்பூன்
முந்திரி - 8
சீரகம் - கால் டீஸ்பூன்
மிளகு -1 ஸ்பூன்
கறிவேப்பிலை -  சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2


 
 
செய்முறை:
 
வரகு அரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் கழுவி தண்ணீர் சேர்த்து குக்கரில்  2 விசில் வரும் வரை வைக்கவும். பிறகு அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.
 
பின்பு கடாயில் நெய்யும் எண்ணெயும் சேர்த்து  சூடாக்கி, மிளகு சீரகம் , முந்திரி,  கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து பொங்கலை சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்து  கிளறவும்.   
 
சாம்பார் தேங்காய் சட்னியுடன்  பரிமாறவும்.