வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

ஆலு பன்னீர் கோப்தா செய்ய...!

மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன், சூடாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். எப்போதும்  பஜ்ஜி, போண்டா போன்றவற்றைதான் சாப்பிடுவோம். ஒரு மாறுதலுக்கு ஆலு பன்னீர் கோப்தா செய்து சாப்பிடுங்கள் சுவையாக   இருக்கும்.

 
தேவையான பொருட்கள்: 
 
பன்னீர் - 200 கிராம் (துருவியது) 
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து, மசித்தது) 
பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து  கொள்ள வேண்டும். 
 
பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி, லேசாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு வேண்டிய வடிவத்தில் அவற்றை அடிவமைத்து கொள்ளலாம். பின்பு ஒரு காடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.  அவ்வளவுதான். சுவையான ஆலு பன்னீர் கோப்தா தயார். இதனை தக்காளீ சாய்ஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.