வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

அசத்தும் சுவை கொண்ட மிளகு கத்தரிக்காய் பிரட்டல்...

தேவையான பொருட்கள்:
 
தக்காளி - 3-4 
கத்தரிக்காய் - 4
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கடுகு - 1ஃ2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு  - தேவையான அளவு

 
செய்முறை:
 
தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும். கத்தரிக்காயை நீளமாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி  சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் தக்காளி, கத்தரிக்காயை வதக்கவும். தேவையானால் 2 ஸ்பூன் தண்ணீர் தெளித்து வேக  வைக்கவும் காய் வெந்ததும் மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி சிம்மில் வைக்கவும். அடுப்பிலிருந்து எடுக்கும்  சமயத்தில் மிளகு தூள் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.