Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முளைகட்டிய காராமணி கிரேவி

Widgets Magazine

தேவையான பொருட்கள்: 
 
வெள்ளை காராமணி முளைகட்டியது - 1 கப் 
வெங்காயம் - 2 
பச்சை மிளகாய் - 2 
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் 
பூண்டு - 5 
சீரகத் தூள் - கால் ஸ்பூன் 
தனியாத்தூள் - 1/2 ஸ்பூன் 
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி 
தக்காளி - 1 
தேங்காய் துருவல் - 1 ஸ்பூன் 
பெருங்காயம் தூள் - சிறிதளவு 
 
தாளிக்க: பட்டை, சோம்பு, கிராம்பு.

 
செய்முறை: 
 
வேர்கடலையை ஊறவைத்து தேங்காய் துருவலுடன் அரைத்துகொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் ஊரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 
 
முளைகட்டிய காராமணியைக் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டுத் தாளித்து, அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, வேகவைத்த காராமணி சேர்த்துக் கொதிக்கவிடவும். 
 
அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு, பெருங்காய தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி  தழை தூவி இறக்கவும். இது பூரி, சப்பாத்தி, புல்கா, ரொட்டிக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆலு பாலக் கட்லெட் செய்வது எவ்வாறு?

கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி ...

news

ஆரோக்கியம் தரும் பாகற்காய் கார குழம்பு!

முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும். ...

news

சைனீஸ் எக் நூடுல்ஸ் செய்ய வேண்டுமா?

ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் நீர் விட்டு அதில் நூடுல்ஸைப் போட்டு கொதிக்க வைக்கவும். ...

news

வீட்டிலேயே செய்திடலாம் ஆப்பிள் ஜாம்!

ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் ...

Widgets Magazine Widgets Magazine