Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மணத்தக்காளித் துவையல் செய்ய.....

Sasikala|
தேவையானவை: 
 
மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு
மிளகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு துண்டு
தேங்காய் - ஒரு கீற்று
கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு

 
செய்முறை: 
 
கீரையை நன்றாகச் சுத்தம்செய்து, மஞ்சள்தூள் சேர்த்து வெறும் வாணலியில் போட்டு வதக்கவும். வாணலியில் எண்ணெய்  ஊற்றி, காய்ந்ததும் கீரை தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்றாக வறுக்கவும். வதங்கியதும், கீரையையும்  அதில் போட்டு வதக்கி, துவையலாக அரைக்கவும். சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.
 
மருத்துவப் பயன்: 
 
குடல், வாய், நாக்கு, தொண்டையில் ஏற்படும் புண்களுக்கு மிகச்சிறந்த நிவாரணி. உடல் மெலிவாக உள்ளவர்களுக்கு ஊட்டம்  தரும். குடி பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட, கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு  எடுக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :