சுவையான பேபிகார்ன் ஃப்ரை செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
பேபி கார்ன் - 10 
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப 
சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் 
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை 
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
சோள மாவு, அரிசி மாவு - தலா 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
 
சுடுநீரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் பேபிகார்னை போட்டு எடுக்கவும். சாட் மசாலாத் தூள் நீங்கலாக மற்ற பொருட்களான உப்பு, எலுமிச்சைச்  சாறு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு போட்டு சிறிது நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். 
சூடான எண்ணெயில் இதை பொரித்துக் கொள்ளவும். பொரித்த பேபிகார்ன் மீது சாட் மசாலா தூவி சூடாகப் பரிமாறவும். இதனுடன் தக்காளி சாஸ் தொட்டும் சாப்பிட சுவையாக இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :