வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

மிளகாய் சட்னி செய்ய..!

தேவையானவை: 
 
காய்ந்த மிளகாய் - 15
புளி - சிறிய எலுமிச்சையளவு
கடுகு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை: 
 
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும்.

ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.



குறிப்பு: 
 
சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும். ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு ‘ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு ஏற்றதாக இந்த சட்னி இருக்கும்.