Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

Widgets Magazine

தேவையான பொருட்கள்:
 
தனியா - கால் கப்
அரிசி திப்பிலி - 10 கிராம்
கண்டந்திப்பிலி - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
சீரகம் - அரை மேசைக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
வெல்லம் - 100 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
தேன் - அரை கப்
ஓமம் - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - 4
சித்தரத்தை - 10 கிராம்

Diwali Legiyam
 
செய்முறை: 
 
அரிசி திப்பிலி, கண்டந்திப்பிலி, சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் வெண்ணெய், வெல்லம், தேன் இவற்றை தவிர, மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு வாசனை வரும் வரை  வறுக்கவும். வறுபட்டவுடன் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். ஆறியதும் ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர்  ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
 
நன்றாக ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். வாணலியில் வெண்ணெயை  போட்டு உருக விட்டு பின்னர் அதை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெண்ணெய் உருக்கிய அதே  பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி 3 நிமிடம் வாசனை போகும் வரை வதக்கவும்.
 
பிறகு அதில் வெல்லத்தை நசுக்கி அதில் போட்டு வெல்லம் கரைந்து லேகியத்துடன் சேரும் வரை கைவிடாமல் கிளறிக்  கொண்டே இருக்கவும். இதைப் போல 20 நிமிடம் கிளறவும். கிளறும் போது கெட்டியானால் மேலே நெய்யை ஊற்றி விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும் போது நெய் மேலே மிதக்கும் பதம் வந்ததும் இறக்கி வைத்து  விடவும்.
 
ஆறியதும் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து அதனுடன் தேனை சேர்த்து கிளறி பரிமாறவும். தீபாவளி அன்று பெருமாலான வீடுகளில் செய்யும் லேகியம் இது. இதை சாப்பிட்டால் அஜீரண கோளாறு இருக்காது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிக்கன் வடை செய்ய தெரியுமா...!

சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக ...

news

இட்லி மிருதுவாக வரவேண்டுமா?; இந்த முறையை பின்பற்றுங்கள்....

காலை உணவுக்கு ஏற்றது இட்லி. எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. நமக்கே கூட ...

news

காளான் சமோசா செய்ய தெரிந்து கொள்வோம்...!

மாலை வேளை ஸ்நாக்ஸ்கள் என்று அவ்வப்போது வடை, பஜ்ஜி போன்றவைதான் ஈஸி என்று நினைத்து, அதனையே ...

news

லச்ச கொட்டை கீரை கூட்டு செய்வது எவ்வாறு...!

நஞ்சு கொண்டான் கீரை, நச்சு கொட்டை கீரை, லச்ச கெட்ட கீரை, நஞ்சுண்டான் கீரை என பல ...

Widgets Magazine Widgets Magazine