Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆரோக்கியம் நிறைந்த அத்திக்காய் கூட்டு!

Widgets Magazine

தேவையானவை:
 
அத்திக்காய் - 200 கிராம்
தேங்காய்த்துருவல் - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க:
 
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு

 
செய்முறை:
 
கழுவி கட் செய்த அத்திக்காயை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கவும்.
 
லேசாக வதக்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து குழைய  வேகவைக்கவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக போட்டு வறுத்து ஆறவைக்கவும்.
 
பின்னர் அதை மிக்சியில் போட்டு தேங்காய்த்துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்த விழுதை வதக்கி வைத்துள்ள அத்திக்காயுடன் சேர்த்து, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்கவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு பெருங்காயத்தூள் போட்டு தாளித்து கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்க  வைத்து இறக்கவும்.
 
இந்த கூட்டை சாதம், இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சால்ட் அண்ட் பெப்பர் சில்லி மஷ்ரூம்!!

சால்ட் அண்ட் பெப்பர் சில்லி மஷ்ரூம்!!

news

இனி வீட்டிலேயே கொத்து பரோட்டா செய்யலாம்...

இனி வீட்டிலேயே கொத்து பரோட்டா செய்யலாம்...

news

கார்லிக் ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

கார்லிக் ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

news

அரேபியன் ஸ்டைல் கப்ஸா சோறு (சிக்கன்) செய்வது எப்படி?

அரேபியன் ஸ்டைல் பிரியாணி எனப்படும் கப்ஸா சோறு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். ...

Widgets Magazine Widgets Magazine