வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு துவையல் செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்:
 
கொள்ளு 1/4 கப்
துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
வர மிளகாய் 2
மிளகு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
தேங்காய் -2 மேஜைக்கரண்டி
பூண்டு- 2 பல்
உப்பு -1/2 தேக்கரண்டி, புளி

செய்முறை:
 
வாணலியில் எண்ணெய் விட்டு கொள்ளு வறுத்துக்கொள்ளவும். நிறம்மாறும் வரை வறுத்து,எடுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு,  துவரம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் போது, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய், புளி மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும்.
 
இந்த கலவையை வறுத்து வைத்துள்ள கொள்ளு பருப்புடன் சேர்த்து அரைத்து எடுக்கவும், சுவையான மனமும், நற்குணமும் நிறைந்த கொள்ளு துவையல் தயார். இது சூடான சாதம், தோசை அனைத்திற்கும் ஏற்றது.
 
குறிப்பு:
 
* கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். 
* கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். 
* வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.