Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஈஸி வெஜிடபிள் ரைஸ் செய்ய...

Widgets Magazine

தேவையான பொருட்கள்
 
வடித்த சாதம் - 2 கப் (பாஸ்மதி அரிசி)
கேரட் - 1
பீன்ஸ் - 50 கிராம்
குட மிளகாய் - 1
முட்டைக்கோஸ் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1
பட்டை - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 1
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
சர்க்கரை - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
சாதத்தை கொஞ்சம் உதிரி உதிரியாக வடித்து ஆற வைக்கவும். கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குட மிளகாய், பெரிய  வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப்  போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
 
பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகளைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும். அதனுடன் சிறிது சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். 
 
அடிக்கடி கிளறி விடவும். பிறகு தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். அடுத்து ஆறிய சாதத்தைப் போட்டு குழையாமல் கிளற வேண்டும். இதனுடன் மிளகு தூளைச் சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மிக்ஸ்டு வெஜிடபிள் பராத்தா செய்ய...

கோதுமை மாவில் உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். உருளைக்கிழங்கு, ...

news

கொள்ளு சட்னி செய்ய வேண்டுமா...!

கொள்ளு, நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி ...

news

சீஸ் ஆம்லெட் செய்ய தெரியுமா...!

முதலில் கொடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி இலையை, பொடியாக நறுக்கிக் ...

news

பலாப்பழம் பாயாசம் செய்வது எப்படி...

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் ...

Widgets Magazine Widgets Magazine