வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By sasikala
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2015 (14:12 IST)

முருங்கைக்கீரை முட்டை பொரியல்

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை - 2 கப்
முட்டை - 3
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3

செய்முறை:

முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ,  காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்தது வதக்கி பின் பூண்டு தட்டி போடவும். பின் அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையை போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

கீரை நன்கு வெந்த நிலையில் தயாராக வைத்துள்ள முட்டையை ஊற்றி, மிதமான அனலில் வேகவிடவும்.