வற்றல் குழம்பு

Mahalakshmi| Last Modified செவ்வாய், 24 மார்ச் 2015 (13:11 IST)
தேவையான பொருட்கள் :

பழைய புளி - ஒரு பெரிய எலுமிச்ச‌ம் அளவு
உப்பு - தேவையான அளவு
‌மிளகா‌ய் பொடி - 3 தே‌க்க‌ர‌ண்டி
கடுகு, வெ‌ந்தய‌ம் - ‌சி‌றிதளவு
துவரம் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம், கறிவேப்பிலை
எண்ணெய் - 4 அல்லது 5 தே‌க்கர‌ண்டி
அ‌ரி‌சி மாவு - ஒரு தே‌க்கர‌ண்டி
மணத்தக்காளிக்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், கத்தரிக்காய் இவற்றுள் ஏதாவதொரு வற்றல் - அரை க‌ப்

செய்முறை :

குழ‌ம்பு வை‌க்கு‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌ல் எண்ணெயை விட்டு, கடுகு, வெந்தயம், இர‌ண்டாக ‌கி‌ள்‌ளிய மிளகாய் வற்றல், துவரம் பருப்பு இவைகளைப் பெருங்காயத்துடன் சேர்த்து தாளிக்கவும்.

கறிவேப்பிலையையு‌ம், மே‌ற்க‌ண்ட ஏதாவதொரு வற்றலையு‌ம் போட்டு வறுக்கவும். ‌பி‌ன்ன‌ர் ‌மிளகா‌ய் பொடியைப் போட்டு சிவக்க வறுக்கவும். பு‌ளியை ந‌ன்கு கரை‌த்து அ‌ந்த கரைசலை பா‌த்‌திர‌த்‌தி‌ல் ‌விடவு‌ம். உப்பைப் போடவும்.

குழ‌ம்பு ந‌ன்கு கொ‌தி‌த்து வ‌ற்‌றி வரு‌ம்போது அரிசி மாவைக் கரைத்துவிடவும். கொதித்தவுடன் கீழே இறக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :