க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் ம‌சிய‌ல்

Webdunia| Last Modified செவ்வாய், 9 நவம்பர் 2010 (13:18 IST)
தேவையானவை

பெரிய கத்தரிக்காய் - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 3 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1/4 தே‌க்கர‌ண்டி
தக்காளி சாறு - 1 கப்
கொத்துமல்லி - சிறிதளவு

செ‌ய்யு‌ம் முறை
கத்தரிக்காயை அங்கங்கே கத்தியால் குத்தி, மேலே எண்ணெய் தடவி, `மைக்ரோ ஹை'யில் 10 நிமிடங்கள் வைக்கவும்.

கத்தரிக்காயின் தோலை உரித்து எடு‌த்து‌வி‌ட்டு உ‌ள்‌ளிரு‌க்கு‌ம் பாக‌த்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மசிக்கவும்.'

மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, அதில் நறு‌க்‌கிய பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு 2 நிமிடங்கள் `மைக்ரோ ஹை'யில் வைக்கவும்.
வெந்த கத்தரிக்காய், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாறு ஆகியவற்றைக் கலந்து 8 நிமிடங்கள் `மைக்ரோ ஹை'யில் சமைக்கவும்.

கொத்துமல்லித் தழை தூவி அலங்கரித்து சாப்பிடவும்.


இதில் மேலும் படிக்கவும் :