செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala
Last Modified: புதன், 6 ஜனவரி 2016 (17:09 IST)

அதிஷ்ட வீடுகள் அமைய அறைகளின் அமைப்பு - ஈசான்ய அறை (வாஸ்து சாஸ்திர ரகசியம்)

வீட்டின் அமைப்பை பொருத்தே ஒவ்வொரு மனிதனுடைய எண்ணமும் சூழ்நிலையும் உருவாகிறது.


 
 
நாம் நம்முடைய வீட்டின் அறைகளை எந்தத் திசையில், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொருத்து அமைகிறது.
 
ஈசான்ய அறை எப்படி அமைய வேண்டும்?
 
1. ஈசான்ய அறையில் உருவாகும் மின்காந்த சக்தி, மற்ற அறையில் உருவாகும் மின் காந்த சக்தியைவிட அதிகமாக இருக்க வேண்டும்.
 
2. ஈசான்ய அறையில் உருவாகக் கூடிய மின்காந்த சக்தியை, வீட்டில் வசிக்கும் அனைத்து நபரும் பெரும் வகையில் அமைய வேண்டும்.
 
ஈசான்ய அறையின் ஆதிக்கம்:
 
குடும்பத் தலைவர், வருமானம், குழந்தை பிறப்பு, காரிய வெற்றி.
 
ஈசான்ய அறையில் கவனிக்க வேண்டிய விதிகள்:
 
1. வீட்டின் மற்ற அறைகளை விட, இந்த அறையின் தரை மட்ட உயரம் குறைவாக இருக்க வேண்டும்.
 
2. இந்த அறையில், தேவையில்லாத பொருள்களை வைக்கக் கூடாது.
 
3. வடக்கு சுவரும், கிழக்கு சுவரும் இணையும் இடத்தில் உயரமான பொருள்களையோ, பெஞ்சு, சோபாசெட், டி.வி.ஸ்டேண்ட் போன்றவைகளையோ வைக்கக் கூடாது.
 
4. இந்த அறையில் நீரோட்டம் இருப்பது நல்லது. (குளியல் அறையை அமைக்கலாம்).
 
5. இந்த அறையில் அவசியம் சன்னல் அமைப்பு இருக்க வேண்டும்.
 
6. கிழக்கு சுவரும், வடக்கு சுவரும் இணையும் இடத்தை ஒட்டி அடுப்பு, சிலாப் மற்றும் செல்ப் அரைகளை அமைக்கக் கூடாது.
 
7. இந்த அறையில் படி அமைப்பை ஏற்படுத்தப் கூடாது.
 
8. இந்த அறையை சேமிப்பு அறையாக அமைக்கக் கூடாது.
 
9. இந்த அறையைப் படுக்கை அறையாகவும் அமைக்கக்கூடாது.
 
10. இந்த அறையின் கதவு எப்பொழுதும் மூடி இருக்கக் கூடாது.
 
11. வீட்டில் உள்ள அனைத்து நபரும், இந்த அறையை பயன்படுத்தக் கூடிய வகையில் அமைக்க வேண்டும்.
 
12. வடக்கு சுவரும், கிழக்கு சுவரும் இணையக்கூடிய இடத்தில் கழிப்பிட அறையை அமைக்கக் கூடாது.
 
13. இந்த அறை எப்பொழுதும் காற்றோட்ட அமைப்பில் அமைக்க வேண்டும்.
 
14. இந்த அறையில் உருவாகக் கூடிய மின்காந்த சக்தி அலைகள், வீட்டில் எல்லா இடத்திற்கும் சென்றடையக் கூடிய வகையில், மற்ற அறைகளின் அமைப்பையும் அமைக்க வேண்டும்.
 
15. இந்த அறை எப்பொழுதும் தூய்மையாக இருக்க வேண்டும்.
 
16. ஈசான்ய அறை L வடிவமைப்பைப் பெற்று இருக்கக் கூடாது.
 
17. ஈசான்ய அறைக்கு, இருபக்கம் கதவு அமைப்பு அல்லது வழி அமைப்பு இருக்க வேண்டும்.
 
18. ஈசான்ய அறையின்மேல் உயரமான அமைப்பில் குளியல் அறை, கழிப்பிட அறை, மேல்நிலைத்தொட்டி, படி, ரூம், பெட்ரூம் அமைக்கக்கூடாது.
 
மேலே சொன்ன விதி அமைப்புகளின்படி, வீட்டின் ஈசான்ய அறையை அமைக்க வேண்டும்.
 
மேற்சொன்ன விதிகளில் பாதிப்பு இருப்பின், பாதிப்பின் தன்மையைப் பொருத்து குடும்பத்தலைவரின் வருமானம், புகழ் உடல் ஆரொக்கியம் ஆகியவை பாதிக்கப்படும். மேலும் குழந்தைகளின் விஷயங்களிலும் திருப்தியைப் பெற முடியாது.