வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Murugan
Last Modified: சனி, 23 ஜனவரி 2016 (18:59 IST)

வாஸ்து சாஸ்திரம் அறிவியல் சார்ந்த விஷயமா?

உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை" என்று கூறியதன் அடிப்படையில். உலகில் உள்ள கண்டுபிடிப்புகள் அனைத்தையும் இரண்டு முறைகளில் வகைப்படுத்தலாம். 


 

 
1. தர்க்கரீதியான முடிவு (Logical Conclusions):
 
குறிப்பிட்ட கண்டுபிடிப்பை தர்க்கரீதியாகத்தான் மெய்ப்பிக்க முடியும் என்பதற்கு கீழ்க்கண்ட உதாரணத்தை எடுத்து கொள்வோம்.
 
A = B என்றும் B = C என்றும் வைத்து கொண்டால் A = C என்று மெய்ப்பிக்க முடியும்.
 
2. செயலறிவு சார்ந்த முடிவு அ‌ல்லது அனுபவ அறிவு (Empirical Relationship):
 
தர்க்கரீதியாக மெய்ப்பிக்க முடியாத விஷயங்களை புள்ளிவிவரங்களை (Statistics) கொண்டுதான் மெய்ப்பிக்க முடியும் / சொல்ல முடியும். இது அனுபவத்தையும், புள்ளி விபரங்களையும் அடிப்படையாக கொண்ட ஒரு விஷயமாகும்.
 
இதே போன்று வாஸ்து என்பது அறிவியலே என்று தர்க்கரீதியாக அனைத்து விஷயங்களையும் மெய்ப்பிக்க முடியாவிட்டாலும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் அனைத்தையும் மெய்ப்பிக்க முடியும்.