செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Murugan
Last Modified: சனி, 7 நவம்பர் 2015 (20:05 IST)

வாஸ்துப்படி முழுமையான வீடு எவ்வாறு இருக்க வேண்டும்?

ஒரு முழுமையான வீடு வாஸ்துப்படி எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்போம்.


 
 
வாஸ்துப்படி என்று பார்த்தால் இரண்டு இருக்கிறது. ஒன்று மனையடி சாஸ்திரம், மற்றொன்று வாஸ்து. அதாவது பூமியினுடைய அமைப்பை முதலில் பார்க்க வேண்டும். சதுர மனையா? செவ்வக மனையா? அல்லது ஈசானி குறைந்திருக்கிறதா? அல்லது அக்னி மூலை வளர்ந்திருக்கிறதா? போன்றெல்லாம் மனையின் அமைப்பை முதலில் பார்க்க வேண்டும். 
 
ஏனென்றால் சென்னை போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலெல்லாம் மனை வாங்குவது என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. அதனால் கட்டிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், முதல் மாடி, 2வது மாடி என்று ஆகிவிடுகிறது. 
 
அதனால் இறுதியாக என்ன பார்க்க வேண்டுமென்றால்? வடகிழக்கு ஈசானி மூலை அது கொஞ்சம் காலியாக இருந்தால் நல்லது. அதில் அதிகமான சுமை இல்லாமல் காலியாக இருப்பது நல்லது. பிள்ளைகள் படிப்பதற்கு அல்லது உறவினர்கள் வந்தால் தங்குவதற்காகக் கொடுக்கலாம். அதற்கடுத்து தாய், தந்தை, பாட்டன் பாட்டி இருந்தால் அவர்களை அங்கு தங்க வைக்கலாம். பொதுவாக ஈசானி அறையில், அதாவது வடகிழக்கு அறையில் பெரியவர்களை தங்கவைத்தால் வேறு ஏதாவது வாஸ்து தோஷம் இருந்தால் கூட அது போய்விடும். இதுபோன்ற சில விஷயங்கள் இதில் உண்டு. 
 
அதற்கடுத்து அக்னி மூலை என்பது தென்கிழக்கு. இதில் சமையலறை இருந்தால் நல்லது. தென்மேற்கு என்பது கன்னி மூலை. அதுதான் குபேர மூலை. மாஸ்டர் பெட்ரூம். அதாவது இல்லத்தின் தலைவன், தலைவி தங்குவது நல்லது. அதற்கடுத்து வாயு மூலை. இதிலும் ஒரு பெட்ரூம் வரலாம். இதிலும் வருபவர்களை தங்கவைக்கலாம். மற்றதெல்லாம் இருக்கலாம். இதுதான் அடிப்படை வாஸ்து. இது இருந்தாலே ஓரளவிற்கு அனைத்தும் சாதகமாக இருக்கும்.
 
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்