வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

வெள்ளி பாத்திரங்கள் பளபளக்க குடும்ப தலைவிகளுக்கான டிப்ஸ்!

உங்கள் வெள்ளி பாத்திரங்கள் பழையது போல் இருந்தால் அவர்றை புத்தம் புதிது போல எளிதாக சுத்தம் செய்யும் முறையைப்  பற்றி பார்ப்போம். 



தேவையான பொருட்கள்: பெரிய பாத்திரம், தண்ணீர் - மூழ்கும் வரை, சமையல் சோடா - 4 மெஜை கரண்டி, அனுமினியம்  ஃபாயில் ஷீட் - 2 ஷீட்.
 
சுத்தம் செய்ய வேண்டிய பாத்திரங்கள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
 
தண்ணிர் கொதிக்கும் நேரம் அனுமினியம் ஃபாயில் ஷீட்களை சிறிய துண்டுகளாக கிழித்து வைத்து கொள்ளவும். கொதிக்கும்  நீரில் போட்டு, பிறகு பாத்திரங்களையும் போட்டு அதனுடன் சமையல் சோடாவையும் சேர்க்க வேண்டும். 5 முதல் 8 நிமிடங்கள்  கொதிக்க வைக்க வேண்டும்.
 
5 நிமிடங்கள் கழித்து வெள்ளி பாத்திரங்களை வெளியில் எடுத்தால் புதுசு போல பளிச்சிடும். விரும்பினால் மேலும் பளிச்சிட  டிஷ்வாஸ் கொண்டு கழுவி கொள்ளலாம்.