‌விடை தெ‌ரியுமா குழ‌ந்தைகளா?

Webdunia| Last Modified புதன், 19 மார்ச் 2008 (12:32 IST)
இ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை தெ‌ரி‌கிறதா பாரு‌ங்க‌ள். ‌விடைகள‌ை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ற்கு வாரு‌ங்க‌ள்.

நாலு மூலைப் பெட்டி, நடுவிலே ஓடும் குதிரைக் குட்டி

மூடித் திறப்பான் ஓசையில்லாமல்

காய் பழுக்கும் ஆனால் இனிக்காது வெடிக்கும் அது என்ன

கொடி வீசி வளர்ந்தது குதிரை முட்டை

வாலால் ஊசி போட்டு காலால் ஓட வைப்பார்
அம்மா கொடுத்த தட்டிலே தண்ணீர் விட்டால் நிற்கவில்லை

எட்டாத உயரத்தில் இனிப்புப் பொட்டலம்

விடைக‌ள்

அம்மி, குழவி

கண் இமைகள்

இலவம் பஞ்சு
பூசணிக்காய்

தேள்

தாமரை இலை

தேன் கூடு


இதில் மேலும் படிக்கவும் :