விடுகதை

Webdunia|
1. இணை பிரிய மாட்டார்கள் நண்பர்கள் அல்ல ; ஒன்று சேர மாட்டார்கள் பகைவர்கள் அல்ல.
( ரயில் தண்டவாளம் )

2. இதயம் போல் துடித்திருக்கும் ; இரவு பகல் விழித்திருக்கும்.
( கடிகாரம் )

3. இரவல் கிடைக்காதது ; இரவில் கிடைப்பது.
( தூக்கம் )

4. உருவம் இல்லாதவன். சொன்னதைத் திரும்பச் சொல்லுவான். ( எதிரொலி )

5. உள்ளே இருந்தால் ஓடித்திரியும் ; வெளியே வந்தால் விரைவில் மடியும்.
( மீன் )

6. எங்கம்மாள் பிள்ளைத்தாச்சி ; எங்கப்பன் சுவர் ஏறிக் குதிப்பான்.
( பூசணிக்காய் )

7. என் குதிரை கறுப்புக் குதிரை ; குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை.( உளுந்து )

8. ஏழை படுக்கும் பஞ்சணையை எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை. ( பூமி )

9. ஒரு நெல் குத்தி ; வீடெல்லாம் உமியாயிற்று. ( தீபம் )

10. ஓட்டிலே வீடு கட்டி ; உள்ளே உரி கட்டி ; நாட்டாருக்கெல்லாம் நல்ல பொருள் எது? ( புளி )


இதில் மேலும் படிக்கவும் :