Widgets Magazine

குழ‌ந்‌தைக‌ளி‌ன் அசா‌த்‌திய ‌திறமை!

Webdunia| Last Modified வியாழன், 22 நவம்பர் 2007 (16:13 IST)
த‌ங்க‌ள் அரு‌கி‌ல் வருபவ‌ர்க‌ளி‌ல் யா‌ர் ந‌ண்ப‌ர், யா‌ர் எ‌தி‌ரி எ‌ன்பதை பகு‌த்து‌ப் பா‌ர்‌க்கு‌ம் த‌ன்மையை குழ‌ந்தைக‌ள் முத‌ல் 6 மாத‌த்‌தி‌ற்கு‌ள்ளேயே க‌ற்று‌க் கொ‌ள்‌கி‌ன்றன எ‌ன்பது ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌‌ந்து‌ள்ளது.

குழ‌ந்தைக‌ள் ‌பிற‌ந்த முத‌‌ல் ஆறு மாத‌ங்க‌ளி‌ல் பொதுவாக உ‌ட்கார, ஊ‌ர்‌ந்து செ‌ல்ல, நட‌க்க, பேச க‌ற்று‌க் கொ‌ள்ள‌த் தொட‌ங்கு‌கி‌ன்றன. ஆனா‌ல் குழந்தைக‌ள் த‌ங்க‌ள் ‌மீதான ஒருவ‌ரி‌ன் எ‌ண்ண‌த்தையு‌ம் பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ம் த‌ன்மையையு‌ம் அ‌ந்த கால‌க் க‌ட்ட‌த்‌திலேயே பெ‌ற்று ‌விடு‌கி‌ன்றன‌ர் எ‌ன்று‌ம், த‌ங்க‌ள் அரு‌கி‌ல் வருபவ‌ர்க‌ளி‌ல் யா‌ர் ந‌ண்ப‌ர், யா‌ர் எ‌தி‌ரி எ‌ன்பதை பகு‌த்து‌ப் பா‌ர்‌க்கு‌ம் த‌ன்மையு‌ம் வ‌ந்து‌விடுவதாக ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.
குழ‌ந்தைக‌ள் ‌பிற‌ந்த ஒரு‌சில மாத‌ங்க‌ளிலேயே சமூக‌த்தை‌ப் பகு‌த்து பா‌ர்‌க்கு‌ம் ‌‌திறனை‌ப் பெ‌ற்று ‌விடுவதாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் தெ‌ரி‌வி‌த்துள்ளன‌ர். இ‌ந்த‌க் காலக‌ட்ட‌த்‌தி‌ல் குழ‌ந்தைக‌ள் பெ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம் ந‌ல்லொழு‌க்க‌ங்க‌ள் எ‌தி‌ர்கால‌த்‌தி‌‌‌ல் இவ‌ர்க‌ளி‌ன் நடவடி‌க்கை‌க்கு அடி‌ப்படையாக அமை‌கி‌ன்றன எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.
ஆறு மாத‌ங்களே ஆன குழ‌ந்தைக‌ள் அ‌திகமானவ‌ற்றை‌க் க‌ற்‌று‌க் கொ‌ள்‌கி‌ன்றன. அ‌தி‌ல் இரு‌ந்து பல ‌விஷய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றன எ‌ன்று ‌கிலே ஹேம‌லி‌ன் கூறு‌கிறா‌ர். இது பு‌திதாக ‌பிற‌ந்த குழ‌ந்தைகளுக்கு கடினமான ஒ‌ன்று எ‌ன்று கூறமுடியாது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இதை மொ‌ழி, ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌ன் ‌விள‌க்க‌ம் தொட‌ர்பான மு‌ந்தைய ப‌யி‌ற்‌சி எ‌ன்று எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்‌று ‌கிலே ஹேம‌ி‌லி‌ன் கூறு‌கிறா‌ர். அத‌ற்காக குழ‌ந்தைகளு‌க்கு ஒழு‌க்க‌த் த‌ன்மை இ‌ல்லை எ‌ன்று பொரு‌ள் கொ‌ள்ள முடியாது. ந‌ல்ல, த‌‌ீய ‌நிக‌ழ்வுக‌ளி‌ல் இரு‌ந்து அவ‌ர்க‌ள் ந‌ல்லது, கெ‌ட்டதை தெ‌ரி‌ந்து கொ‌ள்வத‌ன் மூல‌ம் எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் ‌சிற‌ந்த ஒழு‌க்க‌த்துட‌ன் வாழ உதவு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.
உல‌கி‌ல் படை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள எ‌ல்லா உ‌யி‌ரின‌ங்களை‌ப் போலவே, ம‌னிதனு‌ம் ஓ‌ர் ம‌னித‌ன் ம‌ற்றொரு ம‌னித‌னிட‌த்‌தி‌ல் எ‌‌வ்வாறு நட‌ந்து கொ‌ள்‌கி‌ன்றா‌ன் எ‌ன்பதை ‌விரைவாக எடை போ‌ட்டு ‌விடு‌கிறா‌ன். இ‌ந்த பழ‌க்க‌த்‌தி‌ற்கான மூலமு‌ம், அது வள‌ர்‌ச்‌சியடை‌ந்த ‌விதமு‌ம் இ‌ன்னு‌ம் க‌ண்ட‌றிய‌ப் பட‌வி‌ல்லை.ஆறு முதல் ப‌த்து மாத‌ங்க‌ள் ஆன குழ‌ந்தைக‌ள் ம‌ற்றவ‌ர்க‌ளி‌ன் நடவடி‌க்கைகளை எடைபோட முடி‌கிறதா எ‌ன்று யே‌ல் ப‌ல்கலை‌க் கழக‌‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ‌கிலே ஹேம‌லி‌னு‌ம், அவரது ந‌ண்ப‌ர்களூ‌ம் ஓர் சோதனை மே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌ச் சோதனை‌க்கு குழ‌ந்தைகளை பெ‌ரிது‌ம் கவரு‌ம் மர‌த்தா‌ல் ஆன ப‌ல்வேறு வடி‌விலான பொ‌ம்மைகளை பய‌ன்படு‌த்‌தின‌ர்.
ம‌னிதனை‌ப் போ‌ன்ற உருவமை‌ப்பு உ‌ள்ள பொ‌ம்மை ஒ‌ன்று யாருடைய உத‌வியு‌ம் இ‌ல்லாம‌ல் மலைமுக‌ட்டி‌ல் ஏறுவது போலவு‌ம், அ‌ப்போது அதனை ஒரு பொ‌ம்மை ‌பிடி‌த்து ‌‌‌கீழே இழு‌ப்பது போலவு‌ம் முத‌லி‌‌ல் கா‌ட்ட‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ர் அ‌வ்வாறு ஏறு‌ம் போது கா‌ர்‌ட்டு‌ன்க‌ளி‌ல் வருவதை‌ப் போ‌ன்ற உருவ‌ம் ஒ‌‌ன்று உத‌வி செ‌ய்வது போல வெ‌வ்வேறு வ‌ண்ண‌ங்க‌ளிலான பொ‌ம்மைகளை‌க் கொ‌ண்டு குழ‌ந்தைகளுக்கு ‌‌விளையா‌ட்டு‌க் கா‌ண்‌பி‌க்க‌ப்ப‌ட்டது‌.
இதனை குழ‌ந்தைக‌ள் த‌ங்க‌ளி‌ன் தா‌யி‌ன் மடி‌யி‌ல் அம‌ர்‌ந்து ர‌சி‌த்தன‌ர். பலமுறை அ‌க் கா‌ட்‌சிகளை‌ப் பா‌ர்‌த்த குழ‌ந்தைக‌ள் உத‌வி செ‌ய்த கா‌ர்‌ட்டு‌ன் பொ‌ம்மையை ஆ‌ர்வமாக எடு‌த்தன எ‌ன்று கூறு‌கிறா‌ர்.

இ‌ந்த ப‌ரிசோதனை‌க்கு ஈடுபடு‌த்த‌ப்ப‌ட்ட 12 மாத‌ங்க‌ள் ‌நிர‌ம்‌பிய அனை‌த்து குழ‌ந்தைகளு‌ம், 10 மாத‌ம் ‌நிர‌ம்‌பிய 16 குழ‌ந்தைக‌ளி‌ல் 14 குழ‌ந்தைகளும் ‌‌கீழே இழு‌த்த பொ‌ம்மையை ‌வி‌ட்டு‌வி‌ட்டு உத‌வி செ‌ய்த கா‌ர்‌ட்டு‌ன் பொ‌ம்மைகளையே தே‌ர்‌ந்தெடு‌த்தன‌ர் எ‌ன்பது எ‌ங்க‌ள் ஆ‌ய்வு‌க்கு வலு சே‌ர்‌ப்பதாக அமை‌ந்தது எ‌ன்று ‌‌கிலே ஹேம‌லி‌ன் கூ‌றினா‌ர்.
எ‌ண்ண‌ம் உருவா‌கி வள‌ர்‌ச்‌சியடைவத‌ற்கு மு‌ன்பே சமூக‌த்தை‌ எடைபோட ம‌‌னித‌ன் க‌ற்று‌க் கொ‌ள்‌‌கிறா‌ன் எ‌ன்பது ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது எ‌ன்றா‌ர். அள‌ப்ப‌றிய சமூக‌த் தொட‌ர்புக‌ள் ம‌னிதனு‌க்கு ‌த‌னி நப‌ர்களை‌ப் ப‌ற்‌றி த‌ீ‌ர்மா‌னி‌க்க அள‌வி‌ல்லாத வா‌ய்‌ப்புகளையு‌ம், ப‌யி‌ற்‌சியையு‌ம் த‌ந்து‌ள்ளதாக கூ‌றினா‌ர்.
குழ‌ந்தைக‌ள் பு‌த்‌திசா‌லி‌த்தனமாக ‌விள‌ங்குவ‌தி‌ல் ஆ‌ச்ச‌ரிய‌மி‌ல்லை எ‌ன்ற ‌கிலே ஹே‌ம்‌லி‌ன், குழ‌ந்தைக‌ள் தாமாகவே பலவ‌ற்றை சு‌ட்டி‌க் கா‌ட்டு‌ம் ‌திறனை‌ப் பெ‌ற்று‌ள்ளதை பெ‌ற்றோரு‌க்கு சொ‌ல்ல கடமை‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் கூ‌றினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :