அப்பாவிற்கு ப‌ரிசு பொரு‌ள்!

Webdunia|
வரும் ஞாயிறன்று (ஜூ‌ன் 15) கொண்டாடப்படும் தந்தையர் தினத்தன்று உங்களது தந்தைக்கு ‌பிடி‌த்தமான பரிசுப் பொருளைக் கொடுத்து அசத்துங்கள்.

ஆமாம் பரிசு கொடுப்பது என்று முடிவு செய்தாகிவிட்டது. என்ன பரிசு கொடுப்பது என்பதில்தான் குழப்பமா?

அதற்காகத்தான் இந்த குறிப்பு :

உங்கள் தந்தை வெகு நாளாக நினைத்திருந்த நிறத்தில் சட்டை ஒன்றை வாங்கிக் கொடுக்கலாம்.

கூலிங்கிளாஸ் அணிபவராக இருந்தால் அவரது முக அமைப்புக்கு ஏற்ற கூலிங்கிளாஸ்.
செல்பேசியை வைப்பதற்கு அலங்காரமான செல்பேசி தாங்கி, செல்பேசியை பெல்டுடன் இணைக்கும் பவுச் போன்றவை.

வெகு தூரம் பயணிப்பவராக இருந்தால் அவருக்கு பயணத்தின் போது கேட்கப் பயன்படும் வகையில் இசைக் கருவி.

அவர் பயன்படுத்தும் வாசனை திரவம்.
உங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் வாசகம் அடங்கிய சிறிய புகைப்படம்.

அவர் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பெரிதாக்கி வீட்டின் சுவரில் மாட்டினால் அவர் அசந்து போவது நிச்சயம்.

அப்பா பார்க்க ஆசைப்படும் அவரது பழைய நண்பரை எப்படியாவது தேடிப் பிடித்து ஞாயிறன்று விருந்துக்கு வரச் சொல்லிவிடுங்கள்.
அன்று மதிய உணவுக்கு வெளியில் குடும்பத்துடன் சென்று உணவருந்திவிட்டு வாருங்கள். அந்த விருந்து நிகழ்ச்சியில் உங்களது தந்தைதான் சிறப்பு விருந்தினர் என்பதை அறிவிக்க மறக்காதீர்கள்

புகைப்படக் கருவி ஒன்றை வாங்கி அளிக்கலாம்.

அவரது அலுவலகப் பணிக்குப் பயன்படுத்தும் வகையிலான பை.
அவர் மிகவும் விரும்பி படிக்கும் எழுத்தாளரின் புதிய வரவுகள்.

கைக்கடிகாரம் மிகச் சிறந்த நினைவுப் பரிசாகும்.

அழகும், பயன்பாடும் நிறைந்த சிறிய மணிபர்ஸ், பேனா போன்றவற்றையும் வாங்கி பரிசாக அளிக்கலாம்.

டிஜிட்டல் டைரி, டிஜிட்டல் கேமரா, கேமராவுடன் இணைந்து செல்பேசியையும் அளிக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :