வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. நிதிநிலை அறிக்கை
  3. மத்திய நிதிநிலை அறிக்கை 2014-15
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 11 ஜூலை 2014 (13:10 IST)

சமுதாய வானொலி நிலையங்களுக்கு ரூ.100 கோடி செலவில் புதிய திட்டம்

600 புதிய மற்றும் ஏற்கனவே உள்ள சமுதாய வானொலி நிலையங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, கிட்டதட்ட 400 சமுதாய வானொலிகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையை மேலும் வலுப்படுத்தப் புதிய திட்டம் வழி வகுக்கும். 
 
பூனேவில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், கொல்கத்தாவில் உள்ள சத்யஜித் ராய் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றுக்குத் தேசிய நிறுவன அங்கீகாரம் அளிக்கப்படும். 
 
மேலும் "கணினி முறை இயங்கும் வரைகலை, விளையாட்டு மற்றும் சிறப்பு ஒளிக்கான தேசிய சிறப்பு மையம்" ஒன்றும் நிறுவப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.