Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சல்மான்கான் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

s
Last Updated: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (14:57 IST)
மான்களை சுட்டு வேட்டையாடிய வழக்கில் ஐந்து வருட சிறைத்தண்டனை பெற்ற பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 
 
சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் சிலர் கடந்த 1998ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அரிய வகை கருப்பு நிற மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளாக கழித்து கடந்த 5-ம் தேதி தீர்ப்பு வெளியாகியது. இந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என்றும், மற்றவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்தார்.
 
மேலும், சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரை போலீசார் ஜோத்பூர் சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் அவர் 2 நாட்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்தார்.
 
இந்நிலையில், சல்மான்கான் தனது வேலை சம்மந்தமாக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அவரை வெளிநாடு செல்ல அனுமதி அளித்தார்.  


இதில் மேலும் படிக்கவும் :