வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 9 ஜூன் 2018 (09:02 IST)

நீட் தேர்வினால் மட்டும்தான் தற்கொலையா? நிர்மலா சீதாராமன்

நீட் தேர்வினால் தமிழகத்திலும் வட இந்தியாவிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து செய்தியாள்ரகள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'இந்த தற்கொலைகள் நீட் தேர்வினால்தான் ஏற்பட்டதா? என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறினார்.
 
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்டவர்கள் தமிழகத்தவர்களா? வட இந்தியர்களா? என்று நான் பிரித்து பார்ப்பதில்லை. ஒரு பரிட்சை எழுதுகிறோம். எதிர்பாராத வகையில் ஒரு மாணவர் தோல்வி அடைகிறார் என்றால் அது சிஸ்டம் கோளாறா? அல்லது அந்த மாணவர் அல்லது மாணவி தேர்வு எழுத தயார் செய்யப்படுவதில் கோளாறா? என்று யோசிக்க வேண்டும். 
 
மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்க ஒன்று தான், அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் அந்த தற்கொலைக்கு நீட் தேர்வு மற்றும் ஐஐடி மட்டுமே காரணம் என்பது சரியல்ல. ஒவ்வொரு மாணவர்களுக்கும் தேர்வுக்கு தயார் செய்வது குறித்தும் அவர்களுக்கு சப்போர்ட் கொடுப்பது பற்றியும் நாம் யோசித்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்